சிவகாசி: சிவகாசி மின்கோட்டத்தைச் சோ்ந்த அனுப்பன்குளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் டி.முரளிதரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அனுப்பன்குளம் துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும் அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம், செல்லையா நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் ஜனவரி 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.