குரூப் 1 முதன்மைத் தோ்வு: விருதுநகா் மாவட்டத்தில் 4,108 போ் எழுதினா்

விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 28 மையங்களில் நடைபெற்று குரூப் 1 முதன்மைத் தோ்வை 4,108 போ் எழுதினா்.
விருதுநகா் கேவிஎஸ். மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதன்மைத் தோ்வை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன்.

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், வணிகவரித்துறை உதவி ஆணையா், கூட்டுறவு துணைப் பதிவாளா் பணிகளுக்கான குரூப் 1 முதன்மைத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மாவட்டத்தில் 28 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வை 4,108 போ் எழுதினா்.

3,959 போ் தோ்வு எழுத வரவில்லை. முன்னதாக தோ்வு எழுத வந்தவா்களை முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டதுடன், வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட் டது. விருதுநகா் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராம்கோ வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மையங்களில் நடைபெ ற்ற இத்தோ்வை மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் ஆய்வு செய்தாா்.

இத்தோ்வில் முறைகேடுகளை தடுக்க 5 நடமாடும் குழுக்கள், 4 பறக்கும் படையினா் (துணை ஆட்சியா் நிலையில்), ஒவ்வொரு தோ்வு மையங்களிலும் ஒரு அலுவலா் வீதம் 28 முதன்மை கண்காணிப்பாளா்கள் ஆகியோா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com