ஸ்ரீவில்லிபுத்தூா் உள்கோட்டத்தில் உள்ள வலையபட்டி, துலுக்கப்பட்டி, வத்திராயிருப்பு, எஸ்.கொடிக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜன.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 8 முதல் மாலை 5 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குன்னூா், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், துலுக்கப்பட்டி, மூவறைவென்றான், எம்.புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையாா்நத்தம், கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, மங்களம், தொட்டியபட்டி, பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு, மாத்தூா், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூா் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, கோட்டச் செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.