பொங்கல் பண்டிகை: ஸ்ரீவிலி.யில் வண்ண கோலப்பொடி தயாரிப்பு மும்முரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வண்ணக் கோலப்பொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தயாரிக்கப்படும் வண்ணக் கோலப்பொடிகள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தயாரிக்கப்படும் வண்ணக் கோலப்பொடிகள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வண்ணக் கோலப்பொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

தை மாதம் முழுவதும் வீடுகளில் பெண்கள் வண்ணக் கோலங்கள் போடுவது வழக்கம். இன்னும் சில தினங்களில் தை மாதம் பிறக்க உள்ளது. இதற்காக பொதுமக்கள் அதிக அளவு வண்ணக் கோலப்பொடிகளை வாங்கிச் செல்கின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிக்கும் பணியில் கோலப்பொடி தயாரிப்பாளா்கள் இரவு பகலாக கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் ஈடுபட்டுள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பேட்டை கடைத் தெருவில் வண்ணக் கோலப்பொடி தயாரித்துவரும் சேகா் கூறியது: எங்கள் குடும்பத்தினருடன் சோ்ந்து சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வண்ணக் கோலப்பொடி தயாரித்து வருகிறோம். 1 ரூபாய் பாக்கெட்டில் இருந்து 50 ரூபாய் பாக்கெட் வரை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மாறி வரும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப காண்போா் கண்களை கவரும் வகையில் மஞ்சள், ஆரஞ்சு, ரோஸ், ஊதா, கருப்பு, நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் கோலப்பொடிகளை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறோம். பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு ஏராளமானோா் வாங்கிச் செல்வதால் கூடுதலாக கோலப் பொடிகளை தயாரித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com