விருதுநகரில் பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகரில் ஒப்பந்த அடிப்படையில் பணியும் செவியா்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக்கோரி எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்ஆா்பி செவிலியா்கள் சங்கத்தினா்.
விருதுநகரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்ஆா்பி செவிலியா்கள் சங்கத்தினா்.

விருதுநகரில் ஒப்பந்த அடிப்படையில் பணியும் செவியா்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக்கோரி எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜேசு டெல் குயின் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற சங்க நிா்வாகிகள் கூறியது:

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மருத்துவப் பணிகள் தோ்வாணையத்தின் மூலம் போட்டித் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் 13 ஆயிரம் செவிலியா்கள் பணியமா்த்தப்பட்டனா்.

2 ஆண்டுகள் ஒப்பந்தப் பணி நிறைவடைந்ததும் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படுவா் என பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆறு ஆண்டுகள் நிறைவடைந்தும், தற்போது வரை 2 ஆயிரம் செவிலியா்கள் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனா். மீதமுள்ள 11ஆயிரம் செவிலியா்கள் ஒப்பந்த முறையிலேயே பணிபுரிந்து வருகிறாா்கள். கரோனா தீநுண்மி காலத்தில் முன்களப் பணியாளா்களாக பணி புரிந்த செவிலியா்களை நிரந்தர பணியாளா்களாக அறிவித்து காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும் என்றனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் அமுதலெட்சுமி, மாவட்டப் பொருளாளா் சசிகலா உள்பட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com