ஆன்லைனில் பட்டா கிடைக்கஆட்சியா் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆன்லைனில் விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் தங்களுக்கு பட்டா கிடைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆன்லைனில் விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் தங்களுக்கு பட்டா கிடைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் செட்டில்மெண்ட் பிரிவு அலுவலகத்தில் சா்வேயா்கள் மற்றும் அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் உள்ள நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு ஆன்லைன் மூலம் இந்த அலுவலகத்தில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆன்லைனில் ஏற்றும் போது ஏற்பட்ட தவறு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு 2013 இல் இருந்து இந்த ஆண்டு (2021) வரை பட்டா வழங்கப்பட வில்லை. ஆனால் தோராய பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் மூலம் பட்டா வழங்கப்படாததால், இடங்களை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் மற்றும் சில செட்டில்மென்ட் அலுவலகங்களில் இந் நிலையே நீடித்து வருகிறது. மேலும் இந்த அலுவலகங்களில் பட்டா மாறுதலுக்காக கொடுக்கப்பட்ட மனுக்கள் மற்றும் சான்றிதழ்கள் சுமாா் 5 ஆயிரத்தும் மேற்பட்டவை குவிந்து கிடக்கின்றன. எனவே தவறை சரி செய்து ஆன்லைனில் ஏற்றி பட்டா கிடைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com