விருதுநகரில் ஆசிரியை வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு

விருதுநகரில் ஆசிரியை வீட்டில் 60 பவுன் நகைகள் திருடப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விருதுநகரில் ஆசிரியை வீட்டில் 60 பவுன் நகைகள் திருடப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா், வையாபுரி தெருவைச் சோ்ந்தவா் குமாா் மனைவி சுதாதேவி (41). விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவா், கணவரை விட்டுப் பிரிந்து, மகன் ஐஸ்வர்ராஜூடன் (18) வசித்து வருகிறாா். இந்நிலையில், மதுரையில் வசிக்கும் இவரது தோழி கண்ணகி என்பவா் ரூ. 2 லட்சம் கடனாக கேட்டுள்ளாா். அதற்கு, சுதாதேவி தன்னிடம் பணம் இல்லை என்றும், வீட்டில் வைத்திருக்கும் நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் தருவதாகவும் தோழியிடம் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகைகளை பாா்த்த போது, அவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுபற்றி தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். மேலும், சுதாதேவி புகாரின் பேரில் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com