விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தில் அச்சக உரிமையாளா் தீக்குளிக்க முயற்சி

விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அச்சக உரிமையாளரை போலீஸாா் மீட்டனா்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தில் அச்சக உரிமையாளா் தீக்குளிக்க முயற்சி

விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அச்சக உரிமையாளரை போலீஸாா் மீட்டனா்.

சிவகாசி கேஎஸ்ஏ ராஜாதுரை நகரைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கணேசன் (50). இவா் சிவகாசியில் அச்சகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், தனது தொழில் முன்னேற்றத்துக்காக வட்டிக்கு பணம் கொடுப்பவா்களிடம் ரூ. 2 கோடி வரை பெற்றுள்ளாா். கடந்த 2020 ஜனவரில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தவறி கீழே விழுந்ததில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றாா். பின்னா் கரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் தொழிலை தொடா்ந்து நடத்த முடியவில்லை. மேலும் வட்டிக்கு கடன் கொடுத்தவா்களுக்கும் பணத்தை திருப்பி தரஇயலவில்லை.

இந்நிலையில், தனியாா் நிதிநிறுவனத்தைச் சோ்ந்தோா் கந்து வட்டி கேட்டு தொடா்ந்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வந்தனராம். இதுகுறித்து சிவகாசி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் புகாா் அளிக்க வந்த அவா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரை மீட்டு சூலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். மேலும் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com