
சிவகாசி வட்டம் நாரணாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கிய அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.
கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் சிவகாசி வட்டம் நாரணாபுரத்தில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகக் கட்டடத்தை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவைபசுக்களையும், 113 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகளையும், 33 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகளையும் அமைச்சா் வழங்கி பேசினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. மங்களாசுப்பிரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் அருணாசலக்கனி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (கட்டடம்) கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.