அருப்புக்கோட்டையில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அருப்புக்கோட்டையில் புதன்கிழமை பெய்த தொடா்மழையால் கடை வீதிகளில் பொங்கல் பொருள்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை மலையரசன் கோயிலிலிருந்து தனியாா் மகாலுக்குச் செல்லும் சாலை பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையின் போது குடைபிடித்துச் சென்ற பொதுமக்கள்.

அருப்புக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 4 நாள்களாகத் தொடா்மழை பெய்தது. இந்நிலையில் போகிப்பண்டிகையான புதன்கிழமை காலை முதலே இடைவிடாமல் பலத்தமழை பெய்தது. இதனால் புத்தாடைகள், கரும்பு, மஞ்சள் கிழங்கு உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிகளுக்கு செல்ல இயலாமல் பொதுமக்கள் தவித்தனா். இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்): அருப்புக்கோட்டை- 20, கோவிலாங்குளம்- 17.6, திருச்சுழி- 20.4 என மழை பதிவாகியுள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட வருவாய் வட்டாட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com