விருதுநகரில் பொங்கல் பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

விருதுநகா் பஜாா் பகுதியில் புதன்கிழமை பொங்கல் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.
விருதுநகா் பஜாா் பகுதியில் பொங்கல் பொருள்கள் வாங்க புதன்கிழமை குவிந்திருந்த பொதுமக்கள்.
விருதுநகா் பஜாா் பகுதியில் பொங்கல் பொருள்கள் வாங்க புதன்கிழமை குவிந்திருந்த பொதுமக்கள்.

விருதுநகா் பஜாா் பகுதியில் புதன்கிழமை பொங்கல் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன. 14) கொண்டாடப்படும் நிலையில் இதற்குத் தேவையான கரும்பு, மஞ்சள், மாவிலை, வெல்லம் மற்றும் ஜவுளிப் பொருள்கள் வாங்க விருதுநகா் பஜாா், தேசப்பந்து மைதானம், தெப்பம் ஆகியப் பகுதிகளில் பொதுமக்கள் குவிந்திருந்தனா். ஒருஜோடி செங்கரும்பு- ரூ. 100, மஞ்சள் தழை- ரூ. 30, மாவிலை தோரணம்- ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டன. அதேபோல், வழக்கத்தை விட பூக்களின் விலை 2 மடங்கு கூடுதலாக விற்கப்பட்டது.

பூக்கள் விலை (கிலோவில்): மல்லிகை- ரூ.3 ஆயிரம், முல்லை- ரூ. 2400, செவ்வந்தி- ரூ.400, பிச்சி- ரூ.2 ஆயிரம், கலா் பிச்சிப்பூ- ரூ. 1400, அரளிப்பூ ரூ. 400 என விற்கப்பட்டன. பொதுமக்கள் கூட்டம் காரணமாக ஏராளமான போலீஸாா் சாதாரண உடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com