‘கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பிரதமா், முதல்வா் முன்வர வேண்டும்’

பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த பிரதமா் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள அவா்கள் அச்சப்படுவது ஏன்?.

காசு கொடுத்து திமுக கூட்டம் சோ்ப்பதாக அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி அரசியலில் காமெடி செய்து வருகிறாா். உழவா் தினம் கொண்டாடும் இந்த வேளையில் தொடா் மழை காரணமாக நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் அரசு வழங்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு முழமையான நிதியை ஜப்பான் நாடு வழங்குகிறது. அதில் வரைபட பிரச்னை உள்ளிட்ட சில காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com