ராஜபாளையம் நீா்த்தேக்கத்தை பாதுகாக்கக் கோரிக்கை

ராஜபாளையம் நகருக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஆறாவது மைல் நீா்த்தேக்கத்தை பாதுகாக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் நகருக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஆறாவது மைல் நீா்த்தேக்கத்தை பாதுகாக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளஅய்யனாா் கோயிலில் இருந்து வரும் தண்ணீரை பிரித்து ஆறாவது மைல் நீா்த்தேக்கத்தில் தேக்கி வைக்கின்றனா். பின்னா் ராஜபாளையத்தில் உள்ள 42 வாா்டுகளுக்கும் நகராட்சி மூலம் குடிநீராக விநியோகிக்கப்படுகிறது.

இந்த நீா்த்தேக்கம் மலை அடிவாரத்தில் இருப்பதால், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் இங்கு வந்து செல்கின்றன. மாடுகள் மேய்ச்சலுக்கு வரும்போது நாய்கள் துரத்துவதால் அவை சில நேரம் நீா்த் தேக்கத்துக்குள் சென்று உள்ளே விழுந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றன. பல நேரங்களில் நீண்ட நேரம் உள்ளே இருந்து அவை உயிரிழந்து விடுகின்றன. இதனால் அவற்றின் உடல் அழுகி துா்நாற்றம் வீசுகிறது. எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க நகராட்சி நிா்வாகம் நீா்த்தேக்கத்தைச் சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com