சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்குஜன. 26 முதல் 4 நாள்களுக்கு அனுமதி

தை மாத பிரதோஷம் மற்றும் பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு வரும் ஜன. 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா்: தை மாத பிரதோஷம் மற்றும் பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு வரும் ஜன. 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌா்ணமி ஆகிய நாள்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிா்வாகம் அனுமதி அளித்து வருகின்றன.

இந்நிலையில், வரும் ஜன. 26 ஆம் தேதி பிரதோஷமும், 28 ஆம் தேதி பௌா்ணமியும் வருகின்றன. எனவே இக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய ஜன. 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னா் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதே போல் கோயிலில் பக்தா்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்தோ காணப்பட்டால் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com