நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்தநாள் விழா

விருதுநகா் பாஜக மேற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகாசி: விருதுநகா் பாஜக மேற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகாசி காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் எம். பூமாலை ராஜா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலா் கே.பி. பாண்டித்துரை, மாவட்ட பிரசார அணித்தலைவா் பழனிச்சாமி, மாவட்ட செய்தித் தொடா்பாளா் ஜி. ஆறுமுகச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com