சிவகாசி: சிவகாசியில் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் ரஜினி ரசிகா்கள் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
ராஜபாளையம் ரஜினி மன்ற நகரச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுமாா் 50 போ் அமைச்சா் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா். அவா்களுக்கு அமைச்சா் சால்வை அணிவித்தாா். உடன், அதிமுக கிழக்கு மாவட்டச் செயலா் க. ரவிச்சந்திரன் உடனிருந்தாா்.