கே. புதூரை கீழக்கோபாலபுரம்ஊராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை

எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால் வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூா் ஊராட்சியில் உள்ள கே. புதூரை, கீழக்கோபாலபுரம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும்
கே. புதூரை கீழக்கோபாலபுரம்ஊராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை

எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால் வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூா் ஊராட்சியில் உள்ள கே. புதூரை, கீழக்கோபாலபுரம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: வத்திராயிருப்பு அருகே குன்னூா் ஊராட்சி உள்ளது. இங்கு 1ஆவது வாா்டு பகுதியில் உள்ள கே. புதூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். ஆனால், குடிநீா், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அதே போல், சாலையின் மேல்புறத்தில் கீழக்கோபாலபுரம் ஊராட்சி உள்ளது. அங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகிறது. ஆனால் நாங்கள் குடிநீருக்காக, கழிவுநீரோடையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. சுமாா் 200 மீட்டா் தூரத்தில் கீழக்கோபாலபுரம் வாக்குச் சாவடி மையம் இருக்கும் போது, நாங்கள் இரண்டரை கி.மீ. தூரத்தில் உள்ள குன்னூருக்கு சென்று வருகிறோம். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். எனவே, கே. புதூா் பகுதியை கீழக்கோபாலபுரம் ஊராட்சியில் இணைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com