பயிா்களுக்கு இழப்பீடு கோரி திமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 28th January 2021 03:45 AM | Last Updated : 28th January 2021 03:45 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே மழை நீரில் மூழ்கிய நெற் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி திமுகவினா் புதன்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேவதானம் தேரடி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ்குமாா், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா். தேவதானம் பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், நிலங்களை கணக்கிடும் கால அளவை நீட்டிப்பு செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் ராசா அருண்மொழி, பொதுக்குழு உறுப்பினா் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.