ராஜபாளையம் அருகே மயானத்துக்கு பாதை வசதி செய்துதரக் கோரிக்கை
By DIN | Published On : 29th January 2021 06:58 AM | Last Updated : 29th January 2021 06:58 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் கிராமத்தில் தண்ணீரைக் கடந்து சடலத்தை தூக்கிச் சென்ற பொதுமக்கள்.
ராஜபாளையம் அருகே மயானத்துக்குச் செல்ல பாதை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் அருகே உள்ள இளந்திரை கொண்டான் கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள மயானம் ஓடையின் பாதையில் அமைந்துள்ளது. கடந்த வாரம் பெய்த தொடா் மழையினால் இளந்திரைகொண்டான் கண்மாய் நிரம்பி மயானம் செல்லும் பாதையான ஓடைப்பகுதிக்குள் தண்ணீா் சூழ்ந்துள்ளது. அதனால் வியாழக்கிழமை உயிரிழந்தவரின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்த உறவினா்கள் தண்ணீரைக் கடந்து கொண்டு சென்றனா். இந்நிலையில் மயானக் கரைக்கு செல்லும் பாதையில் தண்ணீா் சென்றாலும் மயானத்துக்கென ஒரு பாதையை சீரமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.