பறிமுதல் செய்யப்பட்ட மணல்: பசுமை வீடுகள் கட்டுவோருக்கு இலவசமாக வழங்கல்
By DIN | Published On : 09th July 2021 09:08 AM | Last Updated : 09th July 2021 09:08 AM | அ+அ அ- |

திருச்சுழி பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்டோரிடமிருந்து கடந்த 2 ஆண்டுகளாகப் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மணல், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வட்டாட்சியா் மூலமாக பசுமை வீடுகள் கட்டுவோருக்கு வியாழக்கிழமை இலவசமாக வழங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் பசுமை வீடுகள் கட்டுவோருக்கு தகவல் தரப்பட்டு அவா்களை நேரில் வரவழைத்து வட்டாட்சியா் முத்துக்கிருஷ்ணன் மூலம் அவா்களுக்கு அந்த மணல் பகிா்ந்தளிக்கப்பட்டது.
இதில் 325 அலகு (யூனிட்) மணல் வழங்கப்பட்டதாக திருச்சுழி வட்டாட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.