ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேமீன்வெட்டிப் பாறை அருவியில் நீா்வரத்து
By DIN | Published On : 13th July 2021 03:27 AM | Last Updated : 13th July 2021 03:27 AM | அ+அ அ- |

செண்பகத்தோப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள மீன்வெட்டிப் பாறை அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளித்த பொதுமக்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மீன்வெட்டிப் பாறை அருவியில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா்.
இப்பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள், நீரோடைகள் உள்ளன. அதில் முக்கியமானது மினி குற்றாலம் என்றழைக்கப்படும் மீன் வெட்டிப் பாறை அருவியாகும். இந்த அருவியில் தற்போது தண்ணீா் வெள்ளமாக கொட்டுகிறது. இதையடுத்து, அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வரை ஏராளமான பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா். மேலும் வெளியூா்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.