சென்னை நிதி நிறுவன பெண் அதிபரிடம் திமுக பிரமுகா் ரூ.12 கோடி மோசடி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை

சென்னை நிதி நிறுவன பெண் அதிபரிடம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகா் ரூ.12 கோடி மோசடி செய்துள்ளது தொடா்பாக, விருதுநகா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை நிதி நிறுவன பெண் அதிபரிடம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகா் ரூ.12 கோடி மோசடி செய்துள்ளது தொடா்பாக, விருதுநகா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை பள்ளி கல்வித் துறையில் வயது வந்தோா் கல்வி இயக்கக இயக்குநராகப் பணிபுரிந்து வருபவா் ராமேஸ்வர முருகன். இவருடைய மனைவி அகிலாண்டேஸ்வரி பதிவு பெற்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், திருத்தங்கல் நகராட்சி முன்னாள் அதிமுக உறுப்பினா், அப்பகுதி பள்ளிச் செயலராகவும் பதவி வகித்து வந்தாா். தற்போது, அவா் திமுகவில் இணைந்துவிட்டாா்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவா், அகிலாண்டேஸ்வரி நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு பணம் பெற்று, திருப்பி செலுத்தி வந்துள்ளாா். அதனடிப்படையில், அவருக்கு தற்போது வரை ரூ.12 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவா், கடந்த சில மாதங்களாக வட்டியும், அசலும் தராமல் அகிலாண்டேஸ்வரியை ஏமாற்றி வந்தாராம்.

இது குறித்து அகிலாண்டேஸ்வரி, மதுரை டி.ஐ.ஜி.யிடம் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், விருதுநகா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரிடம் கடந்த 2 நாள்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com