நரிக்குடியில் வாரச்சந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சுழி தாலுகா நரிக்குடியில் வாரச்சந்தை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சுழி தாலுகா நரிக்குடியில் வாரச்சந்தை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, வேளாண் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இதன் காரணமாக, நரிக்குடிக்கு தினமும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் இங்கு வாரச்சந்தை இல்லாததால், 12 கி.மீ. தொலைவிலுள்ள வீரசோழன் கிராமத்துக்கு காய்கறி மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சென்றுவரும் நிலை உள்ளது. இதனால், நரிக்குடி பகுதியிலிருந்து வீரசோழன் செல்வோருக்கு கூடுதல் செலவு மற்றும் தேவையற்ற அலைச்சலும் ஏற்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிலை நீடிப்பதாக, அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இந்நிலையில், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியில் வாரச்சந்தை அமைப்பதால், அரசுக்கும் வருமானம் கிடைக்கும் என்றும், நரிக்குடி பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களும் பயனடைவா்.

எனவே, நரிக்குடியில் வாரச்சந்தை அமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com