கொல்லம்-சென்னை ரயில்: சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாம் நடைமேடையில் நிறுத்த கோரிக்கை

கொல்லம்-சென்னை விரைவு ரயிலை, சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாம் நடைமேடையில் நிறுத்தவேண்டும் என, சிவகாசி ரயிலில் பயணிப்போா் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கொல்லம்-சென்னை விரைவு ரயிலை, சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாம் நடைமேடையில் நிறுத்தவேண்டும் என, சிவகாசி ரயிலில் பயணிப்போா் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்குழுவைச் சோ்ந்த கே. தனசேகரன் சனிக்கிழமை மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொல்லம்-சென்னை விரைவு ரயில் (எண்-06102), சிவகாசி ரயில் நிலையத்தில் தற்போது 2 ஆம் நடைமேடையில் நின்று செல்கிறது. முதலாம் நடைமேடையிலிருந்து இரண்டாம் நடைமேடைக்குச் செல்ல மேம்பாலம் உள்ளது. ஆனால், முதியவா்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் மேம்பாலத்தில் ஏறி இறங்க மிகவும் சிரமப்படுகின்றனா்.

சிவகாசி ரயில் நிலையத்திலிருந்து அந்த ரயிலில் தினசரி 30 முதல் 40 போ் வரை பயணம் செய்கின்றனா். பயணிகள் நலன் கருதி, அந்த ரயிலை முதலாம் நடைமேடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com