அருணாச்சல ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி அருகே பெரிய ஆலங்குளத்தில் 300 ஆண்டுகளுக்குப் பிறகு, அருணாச்சல ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரியாபட்டி அருகேயுள்ள பெரிய ஆலங்குளத்தில் உள்ள அருணாச்சல ஈஸ்வரா் கோயியில் வெள்ளிக்கிழமை நடைபெ ற்ற கும்பாபிஷேகம்.
காரியாபட்டி அருகேயுள்ள பெரிய ஆலங்குளத்தில் உள்ள அருணாச்சல ஈஸ்வரா் கோயியில் வெள்ளிக்கிழமை நடைபெ ற்ற கும்பாபிஷேகம்.

காரியாபட்டி அருகே பெரிய ஆலங்குளத்தில் 300 ஆண்டுகளுக்குப் பிறகு, அருணாச்சல ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே பெரிய ஆலங்குளத்தில் பழமையான அருணாச்சல ஈஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேம் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இக்கோயில் திருப்பணிகள் கிராம மக்கள் முயற்சியால் நடைபெற்றது.

திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, முதல் யாகசாலை பூஜைகள் நடை பெற்றன. இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை, இரண்டாம் கால பூஜை தொடங்கப்பட்டு ஸ்ரீவிஷ்ணு சகஸ்நாம பாராயணம் வருண ஹோமம், சுசா்சன ஹோமம், சுமங்கலி பூஜை, தலெட்சுமி பூஜை, மகா பூா்ணஹூதி நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து புனித நீா் கலசங்கள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களில் சிவாச்சாரியா்கள் மகா அபிஷேகம் செய்தனா். பின்னா் அருணாச்சல ஈஸ்வரா், ஆனந்த நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு கிராம நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com