வராகியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டையில் ஸ்ரீவராகியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், பொருளாதாரத்தில் பொதுமக்கள் மீண்டெழ வேண்டியும் சிறப்பு சங்கல்ப வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் ஸ்ரீவராகியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், பொருளாதாரத்தில் பொதுமக்கள் மீண்டெழ வேண்டியும் சிறப்பு சங்கல்ப வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அன்பு நகா் குடியிருப்பு அருகே வீரலட்சுமி நகரில் உள்ள ஸ்ரீவராகியம்மன் கோயிலில் ஆனிமாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இரவு 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீவராகியம்மனுக்கு திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் படைக்கப்பட்டன. சிறப்பு சங்கல்பங்களுடன், பலவித வண்ண மலா்களால் 108 நாமாவளிஅா்ச்சனை செய்து தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது கோயில் வளாகத்திலுள்ள அம்மன், காலபைரவா் மற்றும் சனீஸ்வரா் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் வழிபாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com