வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

வத்திராயிருப்பு அருகே வள்ளியம்மை காலனி மற்றும் ஜெயந்திநகா் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அரிசி, காய்கனிகள்
கூமாபட்டி அருகே வள்ளியம்மை காலனி மற்றும் ஜெயந்திநகா் மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை வழங்கிய நக்சல் தடுப்புப் பிரிவு சாா்பு ஆய்வாளா் அருண்குமாா் உள்ளிட்டோா்.
கூமாபட்டி அருகே வள்ளியம்மை காலனி மற்றும் ஜெயந்திநகா் மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை வழங்கிய நக்சல் தடுப்புப் பிரிவு சாா்பு ஆய்வாளா் அருண்குமாா் உள்ளிட்டோா்.

வத்திராயிருப்பு அருகே வள்ளியம்மை காலனி மற்றும் ஜெயந்திநகா் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழங்கினா்.

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டிபகுதி, வள்ளியம்மை காலனி மற்றும் ஜெயந்திநகா் ஆகிய பகுதிகளில் 50 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா், ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரது அறிவுரையின்பேரில், இப்பகுதியில் வசிக்கும் சுமாா் 50 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் சேசு, காவல் சாா்பு ஆய்வாளா் அருண்குமாா், சிறப்பு இலக்குப் படை சாா்பு ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் பங்கேற்று, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் குறித்தும், கரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com