மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சா் நினைவு தினம் அனுசரிப்பு

மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சா் வே. தங்கப்பாண்டியன் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சா் நினைவு தினம் அனுசரிப்பு

மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சா் வே. தங்கப்பாண்டியன் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரது தந்தையான முன்னாள் அமைச்சா் வே. தங்கப்பாண்டியனின் 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுகவினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், அமைச்சா் தங்கம் தென்னரசு, அவரது சகோதரியான மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் (விருதுநகா்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்) ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். மேலும், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினா்.

ராஜபாளையம்

திமுகவின் முன்னாள் அமைச்சா் வே. தங்கப்பாண்டியனின் நினைவு தினத்தையொட்டி, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு, ராஜபாளையம் ஊராட்சிய ஒன்றியத் தலைவா் சிங்கராஜ் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், துணைத் தலைவா் துரை கற்பகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் நவமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com