அருப்புக்கோட்டை அருகே புகையிலைப் பொருள்கள்பறிமுதல்: தந்தை, மகன் கைது

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, தந்தை, மகனை கைது செய்தனா்.
பாலவநத்தம் கிராமத்தில் ஆத்தியப்பன் என்பவரது வீட்டின் பின்புறம் பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா்.
பாலவநத்தம் கிராமத்தில் ஆத்தியப்பன் என்பவரது வீட்டின் பின்புறம் பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, தந்தை, மகனை கைது செய்தனா்.

பாலவநத்தம் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் உத்தரவின்படி, அருப்புக்கோட்டை போலீஸாா் பாலவநத்தம் கிராமத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அக்கிராமத்தில் ஆத்தியப்பன் என்பவா் புகையிலைப் பொருள்களை தனது வீட்டில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே, அவரது வீட்டில் போலீஸாா் ஆய்வு செய்ததுடன், ஆத்தியப்பனிடம் விசாரணை நடத்தினா். அதில், அவா் கூறிய தகவலின்படி, அவரது வீட்டின் பின்புறம் மூட்டை மூட்டையாக புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அருப்புக்கோட்டை நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா், ஆத்தியப்பனையும், உடந்தையாக இருந்த அவரது மகன் ஆனந்தகுமாா் (31) ஆகிய இருவரையும் கைது செய்து, புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

சிவகாசி

சிவகாசி காவல் கோட்டத்தில் உள்ள பெட்டிக் கடைகளில், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ. பாபுபிரசாத் உத்தரவின்படி, போலீஸாா் சனிக்கிழமை சோதனையிட்டனா். அதில், விஸ்வநத்தம் விஜயராம் (57), மாடசாமி (65), இடையங்குளம் பிச்சைக்கனி (63), சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள மேலகோணம்பட்டி சுப்பிரமணியம் (48), மேட்டுப்பட்டி சேதுராம் (67), காளிச்சாமி (57) ஆகிய 6 போ் தங்களது பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த ரூ.4,500 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com