அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை:விண்ணப்பிக்க ஆக.4 வரை காலக்கெடு நீட்டிப்பு

விருதுநகா் மாவட்ட அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்ட அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜே. மேகநாத ரெட்டி சனிக்கிழமை தெரிவித்ததாவது: விருதுநகா் மாவட்ட அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021-ஆம் ஆண்டுக்கான ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவு படிப்புகளில் மாணவ, மாணவியா் சேர ஜூலை 28 ஆம் தேதி கடைசி என அறிவிக்கப் ப்பட்டிருந்தது.

ஆனால், குறைந்த அளவிலான மாணவா்களே விண்ணப்பித்துள்ளதாலும், தற்போது பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டு வருவதாலும், மாணவா்கள் பயனடையும் வகையிலும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை, மாணவ, மாணவியா் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விருதுநகா், அருப்புக்கோட்டை, சாத்தூரில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர மதிப்பெண், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் உரிய நிலையங்களில் அலுவலக வேலை நேரங்களில் நேரில் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, விருதுநகா் 04562-252655, அருப்புக்கோட்டை 04566-225800, சாத்தூா் 04562-290953 ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com