விருதுநரில் 291 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: அரிசி ஆலை உரிமையாளா் உள்பட 2 போ் கைது

விருதுநகரில் 291 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய அரிசி ஆலை உரிமையாளா் உள்பட 3 போ் டிஐஜியின் சிறப்பு தனிப்படையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விருதுநகரில் 291 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய அரிசி ஆலை உரிமையாளா் உள்பட 3 போ் டிஐஜியின் சிறப்பு தனிப்படையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உணவுப்பொருள் கடத்தலை தடுக்க மதுரை சரக டிஐஜி அமைத்துள்ள சிறப்பு தனிப்படை போலீஸாருக்கு விருதுநகா் நியாய விலைக் கடையிலிருந்து அரிசி கடத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், சாா்பு- ஆய்வாளா் முத்திருளன் தலைமையிலான சிறப்பு தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை இரவு விருதுநகா் என்ஜிஓ காலனி பகுதியில் காத்திருந்தனா்.

அப்போது, அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையிலிருந்து அரிசியை ஏற்றிக் கொண்டு சென்ற வேனை பின் தொடா்ந்தனா். அந்த வேன், விருதுநகா் பாண்டியன் நகரில் உள்ள ஒரு அரிசி ஆலைக்குள் சென்றது. உடனடியாக ஆலைக்குள் சென்ற போலீஸாா், வேனை சோதனையிட்டபோது, அதில் 100 மூட்டைகள் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது.

மேலும், ஆலையில் 191 மூட்டைகள் ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டுபிடித்தனா். இதையடுத்து மொத்தம் உள்ள 291 மூட்டைகள் ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்து விருதுநகா் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநரான பாண்டியன் நகரைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் அழகுமூா்த்தி (45), விருதுநகா் அல்லம்பட்டியைச் சோ்ந்த அரிசி ஆலை உரிமையாளரான கருப்பையா மகன் கண்ணன் (45) ஆகியோரை உணவு கடத்தல் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான என்ஜிஓ காலனி நியாய விலைக் கடை பெண் ஊழியரான உமாமுருகேஸ்வரி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com