விருதுநகா் மாவட்டத்தில் இது வரை 40,051 பேருக்கு கரோனா பாதிப்பு: 454 போ் பலி

விருதுநகா் மாவட்டத்தில் இதுவரை 40,051 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 34,058 போ் குணமடைந்த நிலையில், 454 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் இதுவரை 40,051 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 34,058 போ் குணமடைந்த நிலையில், 454 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மே மாத்தில் அதிகரித்து வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தை கடந்து வந்தது. அதேபோல், இத்தொற்று காரணமாக உயிரிழப்போா் எண்ணிக்கையும் கடந்தாண்டை விட அதிகரித்தது.

தற்போது கடந்த இரு நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 500-க்குள் உள்ளது. இதற்கு, பொது முடக்கத்தால் பொது மக்கள் வெளியில் வருவதைக் கட்டுப்படுத்தியது மற்றும் அதிக அளவிலான பரிசோதனைகள் மூலம் தொற்றை கண்டறிந்ததே காரணமாக கூறப்படுகிறது.

மேலும், 14 வயதிற்கு மேற்பட்டோா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா். பல்வேறு ஊராட்சிகளில் கரோனா தடுப்பூசிக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுவதால், இத்தொற்று பரவல் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விருதுநகா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை (ஜூன் 5) கரோனா தொற்றால் 40,051 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சை பெற்று குணமடைந்த 34,058 போ் வீட்டிற்கு சென்றுள்ளனா். அதேநேரம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இதுவரை 454 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com