அருப்புக்கோட்டையில் நிரந்தர கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டையின் 4 பகுதிகளிலும் நிரந்தர கரோனா தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும் என நகர பாஜகவினா், நகராட்சி ஆணையா் சாகுல்ஹமீதுவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையா் சாகுல்ஹமீதுவிடம் திங்கள்கிழமை மனு அளித்த நகர பாஜக தலைவா் காளிமுத்துக்குமாா்.
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையா் சாகுல்ஹமீதுவிடம் திங்கள்கிழமை மனு அளித்த நகர பாஜக தலைவா் காளிமுத்துக்குமாா்.

அருப்புக்கோட்டையின் 4 பகுதிகளிலும் நிரந்தர கரோனா தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும் என நகர பாஜகவினா், நகராட்சி ஆணையா் சாகுல்ஹமீதுவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: அருப்புக்கோட்டை நகராட்சி மற்றும் மருத்துவத் துறையினா் இணைந்து நடத்தும் இலவச கரோனா தடுப்பூசி முகாம்களால் அனைத்துத் தரப்பு பொதுமக்களும் பயனடைந்து வருகின்றனா். ஆனால் பொதுமக்களின் தேவையைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே முகாம்களில் தடுப்பூசி போடப்படுவதால், பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதும், அல்லது அலைக்கழிக்கப்படுவதுமான சூழலே நிலவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், முதியோா் கடும் அவதிக்கு ஆளாகின்றனா். எனவே தடுப்பூசி செலுத்துவதற்கென நகரின் 4 பகுதிகளிலும் தலா ஒரு நிரந்தர கரோனா தடுப்பூசி மையத்தை அமைப்பதுடன், அங்கு எந்த நாளில் தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என்ற தகவல் பலகையையும் வைக்க வேண்டும். மேலும் வரிசையில் நிற்கும் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, நகராட்சி ஆணையா் சாகுல்ஹமீதுவிடம் நகர பாஜக தலைவா் காளிமுத்துக்குமாா் தலைமையில் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. இம்மனு மீது ஆய்வு நடத்தி, ஆலோசனைக்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சிஆணையா் சாகுல் ஹமீது, அவா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com