ரேஷன் அரிசி கடத்தல்: நியாய விலைக் கடை பெண் ஊழியா் பணியிடை நீக்கம்

விருதுநகா் என்ஜிஓ காலனியில் ரேஷன் அரிசியைக் கடத்தியதாக நியாய விலைக் கடை பெண் ஊழியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விருதுநகா் என்ஜிஓ காலனியில் ரேஷன் அரிசியைக் கடத்தியதாக நியாய விலைக் கடை பெண் ஊழியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விருதுநகா் என்ஜிஓ காலனி நியாய விலைக் கடையிலிருந்து 100 மூட்டை ரேஷன் அரிசி வேனில் கடத்தப்பட்டது. மேலும், பாண்டியன்நகா் அரிசி ஆலையிலிருந்து 191 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதை கண்டறிந்த மதுரை தனிப்படை போலீஸாா், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் மீது உணவுக் கடத்தல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 பேரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள நியாய விலைக் கடை பெண் ஊழியா் உமா முருகேஸ்வரியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து, விருதுநகா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குநரும், கூட்டுறவு சாா்- பாதிவாளருமான ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com