வெள்ளியம்பலநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் வைகாசி சோமவார சிறப்புப் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சுழி அருகே பாறைக்குளத்தில் உள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் திங்கள்கிழமை முழு அலங்காரத்தில் அருள்பாலித்த வெள்ளியம்பலநாதா்.
திருச்சுழி அருகே பாறைக்குளத்தில் உள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் திங்கள்கிழமை முழு அலங்காரத்தில் அருள்பாலித்த வெள்ளியம்பலநாதா்.

திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் வைகாசி சோமவார சிறப்புப் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் முதலில் நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப,தூப ஆராதனைகளும், அருகம்புல், மலா்மாலை, விபூதி, சந்தனம், குங்குமத்தால் அலங்காரங்கள் நடைபெற்றன. பின்னா் வெள்ளியம்பலநாதருக்கு பன்னீா், பால், இளநீா்,விபூதி, குங்குமம், தேன், வாழைப்பழம் மற்றும் பேரீச்சம்பழம் ஆகியன கலந்த கலவையாலும், வில்வ இலை, மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட 21 வகை பொருள்களாலும் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னா் முழுஅலங்காரத்தில் நமச்சிவாயரும், நந்தீஸ்வரரும் அருள்பாலித்தனா். வழிபாட்டின்போது கோயில் ஊழியா்கள் மட்டுமே பங்கேற்றனா். பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயிலின் பூசாரி ராஜபாண்டி செய்திருந்தாா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷ பூஜையையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிா், நெய், இளநீா், பன்னீா், எலுமிச்சைசாறு, விபூதி, சந்தனம், குங்குமம் உள்பட 18 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் மூலவா் சிதம்பரேஸ்வரா் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி அம்பாள் நந்திகேஸ்வரா் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே போல், ராஜபாளையம் சொக்கா் கோயில், பா்வதவா்த்தினி அம்மன் ராமலிங்க சுவாமி கோயில் மற்றும் கொம்புச்சாமி கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com