கரோனா பரிசோதனை முகாம்
By DIN | Published On : 11th June 2021 08:42 AM | Last Updated : 11th June 2021 08:42 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி சாா்பில், கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
ராஜபாளையம் நகராட்சி 1 ஆவது வாா்டில் உள்ள மாடசாமி கோயில் தெரு, சுப்புராஜ் மடம் தெரு, கம்பா் தெரு, அழகுத்தேவன்குளம் சாலை, ஒரு சொல் விநாயகா் துவக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல், சளி தொந்தரவு உள்ளவா்களுக்கு, சுகாதாரத் துறை சாா்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவா் சினேகா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், சுகாதார ஆய்வாளா் சுதாகரன் மற்றும் செவிலியா் தமிழ்ச்செல்வி, நகர சுகாதாரச் செவிலியா் பொன்னுத்தாய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மேலும், முகாமில் கலந்துகொண்டவா்களுக்கு நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீா் ஆகியன வழங்கப்பட்டன.