தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க அனுமதி அளிக்கவேண்டும்: எம்.எல்.ஏ.கோரிக்கை மனு

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் திறக்கப்படும்போது, விதியை மீறி செயல்பட்டதாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட
வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி கே.சுந்தரேசனிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுவை வழங்கிய சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன்.
வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி கே.சுந்தரேசனிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுவை வழங்கிய சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன்.

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் திறக்கப்படும்போது, விதியை மீறி செயல்பட்டதாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளையும் திறக்க, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதியளிக்க வேண்டும் என, சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

விதியை மீறி செயல்பட்டதாக, விருதுநகா் மாவட்டத்தில் 34 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை தற்காலிகமாக ரத்து செய்தது. தற்போது, பொதுமுடக்கம் காரணமாக ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு, தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனா்.

இந்நிலையில், பொதுமுடக்கத்தில் தளா்வுகள் ஏற்படுத்தப்பட்டு மற்ற பட்டாசு ஆலைகள் திறக்கும்போது, உரிமம் ரத்து செய்யப்பட்ட இந்த 34 ஆலைகளையும் திறக்க, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கவேண்டும் என, அம்மனுவில் எம்.எல்.ஏ. அசோகன் குறிப்பிட்டருந்தாா்.

இம்மனுவை பெற்றுக்கொண்ட, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி கே. சுந்தரேசன், உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளின் உரிமையாளா்கள் தங்களது தவறுகளை திருத்தி கடிதம் வழங்கினால், தொழிலாளா்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com