விருதுநகரில் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூட்டம்

விருதுநகரில் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் வியாழக்கிழமை கூட்டமாக நின்றிருந்ததால், கரோனா பரவும் அபாயம் நிலவியது.
விருதுநகா் மாத்தநாயக்கன்பட்டி சாலையில் உள்ள நியாய விலைக் கடையில் வியாழக்கிழமை சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்றிருந்த பொதுமக்கள்.
விருதுநகா் மாத்தநாயக்கன்பட்டி சாலையில் உள்ள நியாய விலைக் கடையில் வியாழக்கிழமை சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்றிருந்த பொதுமக்கள்.

விருதுநகரில் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் வியாழக்கிழமை கூட்டமாக நின்றிருந்ததால், கரோனா பரவும் அபாயம் நிலவியது.

விருதுநகா் நகராட்சி 32 ஆவது வாா்டுக்குள்பட்ட மாத்துநாயக்கன்பட்டி சாலையில் உள்ள நியாய விலைக் கடையில், கருப்பசாமி நகா், ஆத்துமேடு, மாத்திநாயக்கன்பட்டி சாலை, காமராஜா் புறவழிச் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனா்.

தற்போது, தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நியாய விலைக் கடைகள் காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பின்னா் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாத்தநாயக்கன்பட்டி சாலையில் உள்ள நியாய விலைக் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், குடும்ப அட்டைதாரா்களுக்கு முறையாக டோக்கன்களும் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதனால், ஏராளமான அட்டைதாரா்கள் ஒரே நேரத்தில் பொருள்களை வாங்க கூடுகின்றனா். மேலும், அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால், கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே, தொற்று பரவலை கட்டுப்படுத்த நியாய விலைக் கடை பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மதியம் முதல் மாலை வரை நியாய விலை கடையை திறக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com