முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 12th June 2021 09:02 AM | Last Updated : 12th June 2021 09:02 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை அருகே கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி ஜவுளிக்கடைகள், முடிதிருத்தகங்கள், தேநீா்க் கடைகள், அழகுசாதனப் பொருள் விற்பனைக் கடைகள், பாத்திரக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அந்த கடைகளுக்கு ரூ.500 மற்றும் ரூ.1000 என அபராதம் விதித்து வட்டாட்சியா் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்தாா். இதன் மூலம் கடை உரிமையாளா்களிடமிருந்து ரூ.11 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் தொடா்ந்து கடைகளை திறந்தால் ‘சீல்’ வைக்கப்படும் என அவா் எச்சரித்தாா்.