முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
திருச்சுழியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக் கடைக்கு ‘சீல்’
By DIN | Published On : 12th June 2021 08:58 AM | Last Updated : 12th June 2021 08:58 AM | அ+அ அ- |

திருச்சுழியில் விதிகளை மீறி செயல்பட்ட ஜவுளிக் கடைக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்த வட்டாட்சியா் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினா்.
திருச்சுழியில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட ஜவுளிக்கடைக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் திருச்சுழி பிரதானச் சாலையில் விதிமுறைகளை மீறி ஜவுளிக்கடை திறக்கப்பட்டிருந்தது. அந்தக் கடைக்கு வட்டாட்சியா் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் சென்ற வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா். மேலும் விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என வட்டாட்சியா் எச்சரித்தாா்.