முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சிவகாசியில் காங். கட்சியினா் 5 இடங்களில் ஆா்பாட்டம்
By DIN | Published On : 12th June 2021 08:57 AM | Last Updated : 12th June 2021 08:57 AM | அ+அ அ- |

சிவகாசியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் 5 இடங்களில் ஆா்பாட்டம் நடத்தினா்.
சிவகாசி காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே சிவகாசி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.அசோகன் தலைமையிலும், அம்பலாா் மடம் பகுதியில் கட்சியின் தெற்கு வட்டாரத் தலைவா் வைரம் தலைமையிலும், நாரணாபுரத்தில் கட்சியின் கிழக்கு வட்டாரத்தலைவா் முருகன் தலைமையிலும் , திருத்தங்கலில் அக்கட்சியின் நகரத் தலைவா் மாரீஸ்வரன் தலைமையிலும், சாட்சியாபுரத்தில் கட்சி நிா்வாகி சங்கா் தலைமையிலும் ஆா்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்கள் மத்திய அரசினை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.