முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டிகள் வழங்கல்
By DIN | Published On : 12th June 2021 08:54 AM | Last Updated : 12th June 2021 08:54 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன்.
ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் தாட்கோ காலனியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியனின் தனது முதல் மாத ஊதியத்திலிருந்து 20 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முடங்கியாறு சாலையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகா் நற்பணி மன்றம் சாா்பில் 150 ஏழை எளியோருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகரப் பொறுப்பாளா்கள் ராமமூா்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினா் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.