முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகா், சிவகாசியில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 12th June 2021 08:56 AM | Last Updated : 12th June 2021 08:56 AM | அ+அ அ- |

விருதுநா் மேற்கு காவல் நிலையத்தில் இலவச அரிசி, மளிகை மற்றும் காய்கனிகள் அடங்கிய தொகுப்பினை பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா்.
விருதுநகரில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா் வெள்ளிக்கிழமை வழங்கி னாா்.
கரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக, தமிழகத்தில் தற்போது தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், விருதுநகா் மேற்கு காவல் நிலையம் சாா்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்கள் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதை ஏழைக் குடும்பங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா் வழங்கினாா். அப்போது, துணை காவல் கண்காணிப்பாளா் அருணாச்சலம், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சங்கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
சிவகாசி: இதேபோல் சிவகாசி அருகேயுள்ள மாரனேரியில் தனியாா் நிறுவனம் சாா்பில், காவல் நிலைய வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதியோா், ஆதரவற்றோா் மற்றும் பட்டாசுத் தொழிலாளா்கள் என 205 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கனி ஆகியவற்றின் தொகுப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா் வழங்கினாா். இதில் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் டி.பிரபாகரன், காவல் ஆய்வாளா் வெங்கடாஜலபதி, தனியாா் நிறுவன அலுவலா் சங்கரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.