விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 273 பேருக்கு கரோனா: 8 போ் பலி

விருதுநகா் மாவட்டத்தில் 273 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 8 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 273 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 8 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக தினசரி பாதிப்பு 500-க்கும் குறைவாக உள்ளது.

இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் முதலான பகுதிகளைச் சோ்ந்த 273 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கிடையில், 8 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதேநேரம், கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்த 444 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com