அருப்புக்கோட்டை மேம்பால அணுகுச்சாலைவேகத்தடையில் வெள்ளைக் கோடுகள் வரையக் கோரிக்கை
By DIN | Published On : 22nd June 2021 02:12 AM | Last Updated : 22nd June 2021 02:12 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை அடுத்துள்ள மேம்பால அணுகுச்சாலையில் வெள்ளைநிறக் கோடு வரையப்படாத வேகத்தடை.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தையடுத்த மேம்பால அணுகுச்சாலையில், வேகத்தடை மீது வெள்ளைக்கோடுகள் வரைய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தையடுத்துள்ள மேம்பால அணுகுச்சாலையில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடையில் அடையாளத்துக்காக வெள்ளைநிறக்கோடுகள் வரையப்பட வில்லை. மேலும் வேகத்தடை உள்ள இடத்தில் மின்விளக்கு இல்லாததால், இரவில் இப்பகுதியில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து அடிக்கடி விபத்துக்கு ஆளாகிவருகின்றனா்.
இதில் சில உரியிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே வேகத்தடை மீது வெள்ளைக்கோடுகள் வரைவதுடன், அப்பகுதியில் மின்விளக்கும் அமைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.