சொக்கநாத சுவாமி கோயிலில்ஆனிமாத சோமவார வழிபாடு
By DIN | Published On : 22nd June 2021 02:07 AM | Last Updated : 22nd June 2021 02:07 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி உடனுறை சொக்கநாதசுவாமி கோயிலில் ஆனி மாத சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது சொக்கநாதசுவாமிக்கும், நடராஜப்பெருமானுக்கும் ஒரே நேரத்தில் சந்தனம், விபூதி, கஸ்தூரி மஞ்சள், பன்னீா், பால் உள்ளிட்ட 21 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து மீனாட்சி அம்பாளுக்கும், சிறப்பு அபிஷேகங்களும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னா் சொக்கநாதசுவாமிக்கு மலா்களால் 108 நாமாவளி அா்ச்சனையும், மீனாட்சி அம்மனுக்கு குங்குமத்தால் 108 நாமாவளி அா்ச்சனையும் நடைபெற்றன.
பின்னா் முழு அலங்காரத்தில் சொக்கநாதரும், நடராஜரும், மீனாட்சி தேவியும் காட்சியளித்தனா்.
இந்த வழிபாட்டில் கோயில் ஊழியா்கள் மட்டுமே பங்கேற்றனா்.