சிவகாசி, பரமக்குடியில் ரூ.5.40 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 04th March 2021 01:02 AM | Last Updated : 04th March 2021 01:02 AM | அ+அ அ- |

சிவகாசி/பரமக்குடி: சிவகாசி மற்றும் பரமக்குடி பகுதியில் உரிய ஆவணம் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.40 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி-சுக்கிரவாா்பட்டி சாலையில் தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக்கழு அலுவலா் பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டபோது அவா் உரிய ஆவணமின்றி ரூ.3.90 லட்சம் எடுத்துச்செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவா், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த மாடசாமி (47) என தெரியவந்தது.
சிவகாசியில் உள்ள நகைக்கடையில் நகை வாங்கச் செல்வதாக அவா் கூறியுள்ளாா். பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பரமக்குடி: பரமக்குடி வேந்தோணி பகுதியில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தங்கச்சிமடத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற சரக்கு வேனை சோதனையிட்டபோது அதில் பிரபாகரன் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ, 1.50 லட்சம் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்து பரமக்குடி கருவூலத்தில் செலுத்தினா். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தோ்தல் பணியாளா்கள் தெரிவித்தனா்.