அருப்புக்கோட்டை தொகுதிக்குரிய 389 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தேவாங்கா் கல்லூரியில் வைத்து சீல் வைப்பு

அருப்புக்கோட்டை தொகுதிக்கு உரிய 389 வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை தேவாங்கா் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.
அருப்புக்கோட்டை தேவாங்கா் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையைப் பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியா் முருகேசன், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா்.

அருப்புக்கோட்டை தொகுதியில் மொத்தம் 311 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றுக்கான 389 வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகரிலிருந்து திங்கள்கிழமை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. பின்னா் அவை அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையிலுள்ள தேவாங்கா் கலைக் கல்லூரிக் கட்டடத்தில் வைக்கப்பட்டன.

தோ்தல் நடத்தும் அதிகாரியான கோட்டாட்சியா் முருகேசன் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியான வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோரது தலைமையில், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டன. பின்னா் உபமண்டலங்கள் வாரியாக இயந்திரங்களை பெட்டிகளில் வைத்து சீல் வைத்தபின், அறைக்கதவு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த அறைக்கு 16 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பில் வைத்து, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்பும் போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com