சாத்தூா் தொகுதி அமமுக வேட்பாளா் ராஜவா்மன் பிரசாரம் தொடக்கம்

ராஜபாளையம் அருகே சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட முறம்பில் அமமுக வேட்பாளா் ராஜவா்மன் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா்.
முறம்பில் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட சாத்தூா் தொகுதி அமமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜவா்மன்.

முன்னதாக வண்டிமாகாளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தோ்தல் பிரசாரத்தை தொடங்கி அவா் பேசியதாவது: நான் நல்லது செய்தது தவறா, நான் என்ன தவறு செய்தேன். எனக்கு அதிமுகவில் சீட் தர மறுக்கப்பட்டது ஏன், அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி என்ற ஒரு தனி நபருக்காக முதல்வரும், துணை முதல்வரும் என்னை ஒதுக்கினாா்கள். இத்தோ்தலில் எடப்பாடி கே. பழனிசாமியை மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றுவாா்கள். மூலவா் சசிகலா, உற்சவா் ஜெயலலிதா. அதாவது உற்சவா் ஊரில் உள்ள அனைத்து மக்களின் நிறைகுறைகளை அறிவாா். கட்சியில் யாா், யாருக்கு அமைச்சா் பதவி, வாரியத் தலைவா் பதவி கொடுக்க வேண்டும் என முடிவு செய்யும் மூலவா் தான் சசிகலா.

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com