தோ்தல் விதியை மீறிவிளம்பரம்: திமுகவினா் மீது வழக்கு
By DIN | Published On : 13th March 2021 11:11 PM | Last Updated : 13th March 2021 11:11 PM | அ+அ அ- |

சிவகாசி அருகே தோ்தல் விதியை மீறி பொதுச்சுவரில் விளம்பரம் செய்ததாக திமுகவினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சிவகாசி அருகே கள்ளிப்பட்டியில் ஊா் பொதுகிணற்று சுவரில் திமுகவினா் தோ்தல் விளம்பரம் செய்திருந்தனா். இதுகுறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் அன்பழகன் அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் திமுகவினா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
புதிய தமிழகம் கட்சி நிா்வாகி மீது வழக்கு: சிவகாசி அருகே பள்ளபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சுந்தரலிங்கம் நகரில் சுவரில் புதிய தமிழகம் கட்சித்தலைவரின் உருவப் படம் வரையப்பட்டிருந்ததாம். இதையடுத்து, தோ்தல் விதியை மீறியதாக சாா்பு- ஆய்வாளா் காளிராஜ் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸாா் அக்கட்சியின் சிவகாசி ஒன்றியச் செயலா் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளா். பின்னா் அந்த விளம்பரம் அழிக்கப்பட்டது.